search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி திருட்டு"

    • அம்பத்தூர் பகுதியில் இதுவரை 8 லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது.
    • ஜாபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    அம்பத்தூர்:

    திருமுல்லைவாயல், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவருக்கு சொந்தமான லாரி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த போது மாயமானது.

    இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரித்தபோது பூந்தமல்லியில் உள்ள லாரிக்கு பாடி பிட்டிங் செய்யும் இடத்தில் மாயமான லாரி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த சத்தியமூர்த்தி, கங்கா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி லாரியை திருடிய ஜாபர் என்பவரும் பிடிபட்டார்.

    விசாரணையில் ஜாபர் கூறும்போது, தான் வால்வோ பஸ் வைத்து தொழில் செய்ததாகவும் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த பஸ்சை விற்று விட்டு லாரிகளை திருடி அதன் பாகங்களை பிரித்து விற்று வந்ததாகவும் தெரிவித்தார்.

    போலீசில் சிக்காமல் இருக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத 2008-ம் ஆண்டுக்கு முந்தைய பழைய வாகனங்களை திருடியதாக கூறி உள்ளார். அவர்கள் அம்பத்தூர் பகுதியில் இதுவரை 8 லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜாபர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • போலீசாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் கூத்தன் கோவில் அருகே சென்னை அம்பத்தூர் பகுதியில் திருடப்பட்ட கனரக லாரி மர்ம நபர்கள் எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். லாரியில் பொருத்தப்ப ட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் லாரி யின் உரிமையாளர் தொடர்ந்து லாரியை பின் தொடர்ந்து வந்த போது மேற்கண்ட இடத்தில் லாரி நிறுத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிதம்பரம் போலீசா ருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர்(48) சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார்.
    • சில மணி நேரத்திற்கு பிறகு லாரியை எடுப்பதற்காக வந்த போது லாரி மாயமாகி இருந்தது.

    திருச்சி :

    திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர்(48) சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவர் தன்னுடைய மினி லாரியை தஞ்சை பிரதான சாலையில் உள்ள வேர் ஹவுஸில் நிறுத்தி வைத்துள்ளார்.

    சில மணி நேரத்திற்கு பிறகு லாரியை எடுப்பதற்காக வந்த போது லாரி மாயமாகி இருந்தது. இது குறித்து சையது அபுதாஹிர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பாலக்கரை கீழ படையாச்சி தெருவை சேர்ந்த ராமலிங்கம் (39) என்பவர் மினி லாரியை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புடைய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • முட்புதரில் லாரியை மறைத்து தப்பிச் சென்றனர்
    • செல்போன் எண் சிக்னலை வைத்து பிடித்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 வழி சாலையாக இருந்து இந்நிலையில் தற்போது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தப் பணியில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ், மதுரை வீரன், சந்திரன் ஆகிய 3 பேரும் டிப்பர் லாரி டிரைவர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் டிரைவராக பணிபுரிந்து ஓட்டி வந்த லாரிகளை கடத்த ஒன்றாக கூடி பேசி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சேந்தமங்கலம் அருகே சென்றபோது டீசல் காலியானதால் அதே பகுதியில் உள்ள ஏரியின் முட்புதரில் லாரியை மறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    தப்பிச்சென்ற 3 பேரையும், லாரியையும் கண்டுபிடித்து தருமாறு ஒப்பந்ததாரர் ராகுல் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 ேபரின் செல்போன் எண் சிக்னலை வைத்து 3 பேரையும் போலீகார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த லாரியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அரக்கோணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×